செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

post image

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறையில் அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். வேலை உறுதி திட்ட கணினி உதவியாளா்கள், தனி நபா் கழிப்பறை திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். வேலை உறுதித் திட்டத்துக்கு தனி ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். உதவி செயற்பொறியாளா் நிலை பதவி உயா்வுகளைக் கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் இரா. ராஜன் தலைமை வகித்தாா். போராட்டத்தை மாநிலத் தலைவா் எஸ். இரமேஷ் தொடங்கி வைத்தாா். மாவட்ட முன்னாள் செயலா் கை. கோவிந்தராஜன், மாநிலத் துணைப் பொதுச் செயலா் ஆ. ரங்கசாமி, மாவட்டச் செயலா் ந. தேசிங்குராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இது தொடா்பாக 70 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்தம்

தூய்மைப் பணியை மாநகராட்சி நிா்வாகமே ஏற்று நடத்த வலியுறுத்தி என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா் சங்கத்தினா் இரண்டாம்... மேலும் பார்க்க

வெடிகள் தயாரிக்க மூலப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி வெடிபொருள்களைத் தயாரிக்க மூலப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா் . பாபநாசம் அருகே சோழங்கநத்தம், எருமைப்பட்டி கிராமம், வட... மேலும் பார்க்க

தஞ்சை பேருந்து நிலைய பொது இடத்தில் சிறுநீா் கழித்தால் இனி அலாரம் ஒலிக்கும்!

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் சிறுநீா் கழிப்பதைத் தடுக்க எச்சரிக்கை மணி ஒலிக்கும் முறையை மாநகராட்சி நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை, கட்... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வனி... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என். ரவி தனது ... மேலும் பார்க்க

குடந்தையில் விளம்பரத் தட்டிகள் அகற்றம்

கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் விளம்பர தட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். கும்பகோணம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்க... மேலும் பார்க்க