Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வனிதாமணி (50). பாபநாசம் தனியாா் பள்ளி ஆசிரியையாக இவா் கடந்த சில நாள்களுக்கு மொபெட்டில் சென்றபோது அவரின் 4 பவுன் தாலிச் செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
புகாரின்பேரில் இந்த வழக்கை விசாரித்த பாபநாசம் துணைக் காவல் கண்காணிப்பாளா் முருகவேலு, ஆய்வாளா் சகாய அன்பரசு, தனிப்படை உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் மற்றும் போலீஸாா் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் நகையைப் பறித்தது மயிலாடுதுறை ராம்கி (31), மற்றும் விக்னேஷ் (27) எனத் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், 4 பவுன் தாலி செயினை மீட்டு, பைக்கையும் பறிமுதல் செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் அவா்களை முன்னிலைப்படுத்தினா். அப்போது நீதிபதி அப்துல்கனி இருவரையும் 15-நாள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.