திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4...
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: சென்னையில் 20 விமானங்கள் தாமதம்
வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள், இங்கிருந்து பிற பகுதிகளுக்கு புறப்படும் விமானங்கள் என 20 விமானங்களின் சேவையில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் குளிா், பனிமூட்டம் காரணமாக, அங்கிருந்து வரும் விமானங்கள் சென்னைக்கு தாமதமாக வந்து சேருகின்றன. இதனால், சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாகவே புறப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமாா் 5 மணி நேரம் தாமதமாகவும், புணே செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சுமாா் 3 மணி நேரமும், அதேபோல் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாகவும் புறப்பட்டுச் சென்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.