செய்திகள் :

எமர்ஜென்சி 2ஆவது டிரைலர்!

post image

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரணாவத் எமர்ஜென்சி படத்தின் 2ஆவது டிரைலரை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனாவுக்கு இதுவரை 4 முறை தேசிய விருதுகள் தரப்பட்டுள்ளன.

எமர்ஜென்சி படத்தினை கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். உடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்தை தணிக்கை செய்யவிடாமல் மிரட்டுவதாக கூறியிருந்தார்.

கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காததற்கு பீபி கொலபாவாலா, ஃபிர்டோஷ் பூனிவாலா அடங்கிய மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2ஆவது டிரைலரை வெளியிட்டு படம் வரும் ஜன.17ஆம் தேதி வெளியாகுமென அறிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில், “ 1975 எமர்ஜென்சி - இந்திய வரலாற்றை நிச்சயத்த பகுதி. இந்திரா- இந்தியாவின் வலிமையான பெண். நாட்டை உருமாற்றும் அவரின் ஆசைக்கு இடையே எமர்ஜென்சி எனும் பெருங் குழப்பத்தில் மூழ்கிவிட்டார்” எனப் பதிவிட்டுள்ளார்.

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மதகஜராஜா!

விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் புதிய டிரைலர் யூடியூப் டிரெண்டுங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத க... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை பட டிரைலர்!

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசைய... மேலும் பார்க்க

நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு... மனிஷா கொய்ராலா பகிர்ந்த விடியோ!

நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு தான் என்ன செய்தேன் என விடியோ பகிர்ந்துள்ளார். அதில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், “நிலநடுக்கத... மேலும் பார்க்க

மீண்டுமா? பொங்கல் வெளியீட்டில் புஷ்பா - 2!

புஷ்பா - 2 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில்... மேலும் பார்க்க

பாடகர் உதித் நாராயண் குடியிருப்பில் தீ விபத்து!

பாடகர் உதித் நாராயணின் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை அந்தேரி தெற்கு பகுதியில் திரைப்படப் பாடகர் உதித் நாராயணன் வசிக்கும் ஸ்கைபேன் குடியிருப்பில்... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்த அஜித்: நொறுங்கிய கார் - விடியோ!

நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கினார்.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு வந்தார். இதற்... மேலும் பார்க்க