செய்திகள் :

Seeman: ``சீமான் கண்ணியத்தைக் காக்கத் தவறிவிட்டார்... நடந்தது இதுதான்'' - பபாசி நிர்வாகிகள் காட்டம்

post image

நூல் வெளியீட்டு விழாவில் சீமான்

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 48-வது புத்தகக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

இதில் கடந்த ஜனவரி 4-ம் தேதி 'தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு? எப்படி?' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் 'நீராருங் கடலுடுத்த...' தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக, பாரதிதாசன் எழுதிய 'வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது. இது புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாகும். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சீமான், ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்தாய் வாழ்த்து பாடலில் இருக்கும் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரிகள் பாடப்படாமல் தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக் குறித்து அப்போது கருத்துத் தெரிவித்திருந்த சீமான், 'திராவிடநல் திருநாடும்' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும் தமிழ்தாய் வாழ்த்தே வேண்டாம். அதற்குப் பதிலாக பாரதிதாசனின் பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக வைக்கலாம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தகக் கண்காட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் பாதை

சர்ச்சைக்கு காரணம்..

மேலும், புத்தகக் கண்காட்சி அரங்கின் நுழைவு வாயிலில், கம்பர் பாதை, வள்ளுவர் பாதை, வ.உ.சி பாதை, 'முத்தமிழறிஞர் கலைஞர் பாதை' என பாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதைக் குறிப்பிட்டு 'முத்தமிழறிஞர் கலைஞர் பாதை' என்று பெயர் வைத்திருப்பதை, "அது நாசப்பாதை, கேடு கெட்ட, கேவலம் கெட்டப் பாதை" என்று கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார் சீமான்.

சீமானின் இந்தப் பேச்சும், 'நீராருங் கடலுடுத்த...' தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக பாரதிதாசன் எழுதிய 'வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே' என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன.

கண்டனம் தெரிவித்த பபாசி

இந்த விவகாரத்தில் சீமானைக் கடுமையாகக் கண்டித்துள்ளது சென்னை 48-வது புத்தக கண்காட்சியை நடத்தி வரும் பபாசி அமைப்பு. இதுகுறித்துப் பேசியிருக்கும் பபாசி நிர்வாகிகள், "இது அரசியல் மேடையல்ல. புத்தகக் கண்காட்சி விழாவில் அரசியல் பேசக்கூடாது என சீமானிடம் முன்பே திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தோம். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததால்தான் சீமானை அந்நிகழ்ச்சிக்கு அனுமதித்தோம். அந்நிகழ்ச்சியில் 'நீராருங் கடலுடுத்த...' தமிழ்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்படாததற்கு அந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்களும், சீமானும்தான் காரணம். அதன் பதிப்பாளர்களே அதற்காக முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

பபாசி நிர்வாகிகள்

சீமான், பபாசி அமைப்பின் விதிமுறைகளை மீறி அரசியல், தனிநபர் தாக்குதல் என மேடையைத் தனதாக்கிக் கொண்டுள்ளார். சீமானின் இந்தச் செயலுக்குக்காக பபாசி அமைப்பு கண்டனத்தையும், வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறது.

எழுத்தாளர்கள், இலக்கியம் சார்ந்த தலைவர்களின் பெயர்களை புத்தகக் கண்காட்சி அரங்கின் பாதைகளில் வைத்துள்ளோம். அதைத் தவறாகப் பேச சீமானுக்கு உரிமையில்லை. பபாசி அமைப்பு எந்தவொரு அரசியல் சார்பும் இன்றி 48-வது முறையாக இந்தப் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. எங்களின் மேடையில் தமிழ்நாடு அரசின் முதல்வரை தாக்கிப் பேசியிருப்பதும், தமிழ்தாய் வாழ்த்தைப் புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சீமான் கண்ணியத்தை காக்கத் தவறிவிட்டார்" என்று பேசியிருக்கின்றனர்.

உயிரோடிருப்பவருக்கு இறப்புச் சான்று - முறைகேடான பத்திரப்பதிவால் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

காரியாபட்டி நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் இருளாயி. இவர் குடும்பத்தின் பூர்வீக நிலம் திருச்சுழி பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில், இருளாயி இறந்துவிட்டதாக போலியாக சான்று பெற்று, அவர்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; தலைவர்களின் சிலைகள் மறைப்பு; மேயர் அலுவலகம் சீல்

கடந்த 2021-இல் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியாரின் கொள்ளுப் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவேரா காங்கிரஸ் கட்சி சார... மேலும் பார்க்க

ஈரோடு: இபிஎஸ் உறவினருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை; பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என். ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான பிரபல தனியார் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.ஈரோட்டைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இந்தக் கட்... மேலும் பார்க்க

திருநெல்வேலி: அண்ணாநகர் பூங்காவில் நீர் தேக்கம்; நோய்த்தொற்று அச்சத்தில் மக்கள்!

திருநெல்வேலி மாவட்டத்தின் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா, அப்பகுதியின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள், இந்த பூங்காவில் மாலை நேரத்த... மேலும் பார்க்க

HMPV : ``யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக..." - அமைச்சர் மா.சுப்ரமணியன்

சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்... மேலும் பார்க்க

`இனி அதிரடி' - திமுகவை போட்டுத்தாக்கும் சிபிஎம் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் - பின்னனி என்ன?

தி.மு.க-வை விமர்சிப்பதில் அ.தி.மு.க-வை விஞ்சி நிற்கிறது சி.பி.எம். தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடைபெறுகிறதா என்ற கேள்வியை அக்கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் எழுப்பி கூட்டணிக்குள் வெடி வ... மேலும் பார்க்க