சத்தீஸ்கர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மூவர் கைது: துப்பு துலக்கியது எப்படி?
சத்தீஸ்கரின் பிஜப்பூர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
பிஜர்பூர் மாவட்டத்தில் 33 வயது பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர். முகேஷ் என்டிடிவி உள்ளிட்ட முக்கிய செய்தி நிறுவனங்களில் ஃப்ரீலான்ஸர் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்தார். மேலும் பாஸ்டர் ஜங்ஷன் என்ற யூடியூப் சேனலையும் நடத்திவந்தார்.
ஜனவரி 1-ம் தேதி முதல் பத்திரைக்காளர் காணாமல் போனதையடுத்தை அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து போலீஸார் இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகேஷ் கடைசியாக சுரேஷின் குடியிருப்புக்குச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முக்கேஷ் காணாமல் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், சத்தீஸ்கரில் ரூ. 120 கோடி மதிப்பிலான பஸ்தார் சாலை கட்டுமான திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் என்பவருடனான பேட்டியில் பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில நாள்களுக்கு முன்னர் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், ஜனவரி முதல் தேதியில் முகேஷை சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் சந்திக்குமாறு அழைத்துள்ளார்.
அழைப்பையடுத்து முக்கேஷ் ரித்தேஷை சந்திக்கச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து முகேஷ் வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த போலீஸார் சுரேஷின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டதில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் முகேஷ் சடலமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷின் சகோதரர் ரித்தேஷ் கைதுசெய்யப்பட்டார். பின்னர் இக்கொலை தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை.
பீஜப்பூர் உள்ளிட்ட பஸ்தார் கோட்டத்தில் உள்ள ஒப்பந்ததாரரின் சொத்துகளைப் பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, தேசிய நெடுஞ்சாலை 36-ல் உள்ள மருத்துவமனை சௌக் பகுதியில் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கொலையில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பிறருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும், அவருக்கான பாதுகாப்பை நீக்க வேண்டும், அவரது வங்கிக் கணக்குகளுக்கு சீல் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் பிஜப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையற்ற சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று பத்திரிகையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் உறுதியளித்தார். இதற்கிடையில், ராய்ப்பூர் பிரஸ் கிளப்பின் உறுப்பினர்கள் ஜெய் ஸ்தம்ப் சௌக்கில் கூடி, கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர் மற்றும் கொலையை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும் என்று கோரினர்.