கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
சண்டீகரில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது
சண்டீகரில் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது.
சண்டீகரின் செக்டார்-17ல் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்ட அடுக்கு மாடிக் கட்டடம் திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, இந்த கட்டடம் பாதுகாப்பற்றது என முன்பே அறிவிக்கப்பட்டது.
கை நடுக்கம், கண்ணீர்... விஷாலுக்கு என்ன ஆனது?
காலை 7.15 மணியளவில் கட்டடம் இடிந்ததும் அப்பகுதி காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது என்றனர்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தில் உள்ள சோஹானா கிராமத்தில் பல மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.