11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் எப்போது?
மகாராஷ்டிரத்தில் ஏப். 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்!
மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் நடைமுறையை கட்டாயமாக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘ஃபாஸ்டேக்’ முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கேஒய்சி எனப்படும் தங்கள் சுய விவரங்களை ஃபாஸ்டேக்கில் இணைப்பதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் தாமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஏப். 1 முதல் ஃபாஸ்டேக் நடைமுறையை கட்டாயமாக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.