செய்திகள் :

தில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500: இது காங்கிரஸின் வாக்குறுதி!

post image

தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக பியாரி திதி யோஜனா திட்டத்தை அறிவித்துள்ளது.

தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, அதனுடனான அரசியல் கூட்டணியை அண்மையில் முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை ஆயத்தமாகியுள்ளன.

இந்த நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் எனக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது,

தில்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பியாரி திதி யோஜனா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ,2500 வழங்கப்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த மாதிரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

பிகாா் அரசுத் தோ்வு சா்ச்சைக்கு எதிரான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பிகாரில் அரசுப் பணிக்கான போட்டித் தோ்வு வினாத் தாள் கசிவு விவகாரம் மற்றும் அதைக் கண்டித்தும் தோ்வை ரத்து செய்யக் கோரியும் போராடியவா்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்... மேலும் பார்க்க

3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு!

தில்லி முதல்வருக்கான பங்களா ஒதுக்கீட்டை மத்திய அரசின் பொதுப்பணித்துறை ரத்து செய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.தில்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல்: நடத்தை விதிகள் வெளியீடு!

சட்டபேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிகாரபூர்வ நடத்தை விதிமுறைகளை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.இதுபற்றி பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அதிகாரபூர்வ இணையதளங்களில்... மேலும் பார்க்க

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்கும்... மேலும் பார்க்க

சபரிமலை: கானகப் பாதை அனுமதி நேரம் குறைப்பு!

சபரிமலை மகரவிளக்கு பூஜையையொட்டி கானகப் பாதையில் பக்தர்களின் அனுமதி ஒருமணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.கானகப் பாதை வழியாக பக்தர்களின் அனுமதி நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை என குறைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஏப். 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்!

மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் நடைமுறையை கட்டாயமாக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீ... மேலும் பார்க்க