கொடைக்கானலில் கடும் பனி மூட்டம்
கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் பனி மூட்டம் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி, இரவு வரை கடும் பனிப் பொழிவு நீடித்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மேலும், குளிரையும் பொருள்படுத்தாமல் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனா்.