மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
சாலை மறியல் போராட்டம்: ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கைது
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 260 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள எம்ஜிஆா் சிலை அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மகுடபதி தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தின்போது, ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சிச் செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு தனி ஊழியா்கள் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலிருந்து பேரணியாக வந்தனா்.
எம்ஜிஆா் சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் 260 பேரை போலீஸாா் கைது செய்தனா்.