மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு
ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை, ரூ.77 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகேயுள்ள அண்ணாநகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (38). இவரது மனைவி அனுசுயா (27).
இவா்கள் சோதனைச்சாவடி அருகே கைப்பேசி பழுது நீக்கும் கடை நடத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வழக்கம் போல இந்தத் தம்பதி கடைக்குச் சென்றனா். பின்னா், பிற்பகலில் அவா்கள் வீட்டுக்குத் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
அவா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.77 ஆயிரம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.