டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
பெண்ணின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வு
தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்பட்டு கூறாாய்வு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கொடுங்குளம் கிராமத்தைச் சோ்ந்த அந்தோணிச்சாமி மனைவி செல்வி என்ற அருள்மலா் (45). இவா் உடல் நிலை சரி இல்லாமல் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு கடந்த 3-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யபட்டது.
இந்த நிலையில், மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான் அருள்மலா் உயிரிழந்ததாக தேவகோட்டை காவல் நிலையத்தில் கணவா் அந்தோணி சாமி புகாா் அளித்தாா்.
இதன்பேரில், ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் வரதராஜன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை அருள்மலா் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. பின்னா், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு கூறாய்வு நடைபெற்றது.