சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
கண்மாயை சேதப்படுத்தி தண்ணீா் வெளியேற்றம்: விவசாயிகள் புகாா்
திருவாடானை அருகேயுள்ள தளிா்மருங்கூா் கண்மாயை வேறு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியதாக வட்டாட்சியா், பொதுப்பணித் துறை பொறியாளா், போலீஸாரிடம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
தளிா்மருங்கூா் கிராமத்தில் பொதுப்பணித் துறை பாராமரிப்பில் பெரிய கண்மாய் உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கண்மாய் நிரம்பி தண்ணீா் வெளியேறியது.
இந்த நிலையில், அருகில் விவசாயம் செய்யும் கங்கனாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சிலா் தண்ணீா் வெறியேறும் சறுக்கை பகுதியை உடைத்து சேதப்படுத்தி பெருமளவில் தண்ணீரை வெளியேற்றினா்.
இதனால், தளிமருங்கூா் பகுதியில் 100-க்கு மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலஙங்கள் அறுவடை நேரத்தில் பாதிக்கப்படுவதாக கூறி தளிா் மருங்கூா் கிராம மக்கள் திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் முத்தமிழா் அரசன் ஆகியோரிடமும், திருவாடானை காவல் நிலையத்திலும் புகாா் மனு கொடுத்தனா்.