டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல் 75 போ் கைது
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் செவ்வாய்க்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் வீரகடம்பகோடி சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு தனி ஊழியா் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறையினா் திரளாக பங்கேற்றனா்.
பின்னா், ஆட்சியரகம் முன் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனா்.