மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
அரவக்குறிச்சி-சின்னதாராபுரம் சாலையில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் ஒன்றிரண்டு தெருவிளக்குகளே உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்ல இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று ராஜபுரம் வழியாகவும் மற்றொன்று அரிகாரன்வலசு வழியாகவும் செல்லும் சாலை தலா 15 கி.மீ கொண்டதாகும்.
இவ்விரண்டு சாலைகளிலும் ஒன்றிரண்டு தெருவிளக்குகளே உள்ளதால், இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இச்சாலையை கடந்து செல்கின்றனா்.
தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில், இச்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.