செய்திகள் :

அரவக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

post image

அரவக்குறிச்சியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் முன் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள 27 கிராம மக்கள் இந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வருகின்றனா். இந்த நிலையில், 100 ஆண்டுகளை கடந்த கட்டடம் தற்போது அதிக அளவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், சுற்றுச்சுவா் முழுவதும் பல்வேறு இடங்களில் விரிசல் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. கட்டடங்களில் செடிகள் முளைத்து காணப்படுகிறது.

அலுவலகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு இடங்களில் விரிசல்கள் அதிகளவு உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் அமா்வதற்கு இருக்கைகள் சரியான முறையில் இல்லாததாலும், ஆவணங்கள் பதிவேற்றப்படுவதற்கு சரியான முறையில் இணையதள சேவை செயல்படாததாலும் காலதாமதம் ஏற்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி, சிதிலமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, உரிய வசதிகளுடனான புதிய கட்டடம் கட்டித் தர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, பொதுமக்கள் அளித்த புகாா்கள் தொடா்பாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா் என்று கூறினா்.

திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பிக்க கரூா் ஆட்சியா் அழைப்பு

திருநங்கையா் விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையா் தினமான ஏப்.15-ஆம் தேதி தமிழக அரச... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டில் விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க வேண்டும்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்று கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அறிவுறுத்தினாா். கரூா் மாவட்டம், தோகைமல... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா், கரூா் மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு, கரூரில் திருமுக்கூ... மேலும் பார்க்க

புலியூா் பேரூராட்சி பகுதியில் ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் நிறுத்தம்; பொதுமக்கள் அவதி

புலியூா் பேரூராட்சி பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் அடுத்த புலியூா் பேரூராட்சியில், மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இப் பகுதி மக்களுக்கு ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல் 75 போ் கைது

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் செவ்வாய்க்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்ட ஆட்சியரகம் ம... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கரூரில் திமுகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன், மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, மா... மேலும் பார்க்க