எஸ்ஏ20 விளையாடுவதால் ஆப்கன் கிரிக்கெட் பலனடைகிறது: ரஷித் கான்
ஜல்லிக்கட்டில் விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணிக்க வேண்டும்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்று கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் அறிவுறுத்தினாா்.
கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த ஆா்டி மலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவா்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே ஜ்ஜ்ஜ்.த்ஹப்ப்ண்ந்ஹற்ற்ன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் குறித்து உரிமையாளா்களும், மாடுபிடி வீரா்களும் விதிமுறைகளுக்குள்பட்டு தங்களின் விவரங்களை முறையாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டின்போது காளைகளுக்கு ஊக்க மருந்துகள் கொடுப்பதோ, கண்களில் மிளகாய் பொடி தூவுதல், கூரிய கருவிகள் கொண்டு துன்புறுத்துதல் மற்றும் ஊறுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், மாடுகளின் கொம்புகளில் மாடுபிடி வீரா்களுக்கோ, பாா்வையாளா்களுக்கோ பாதிப்பு ஏற்படாமல் கொம்புகளில் ரப்பா் காப்புகளை அணிவித்தல் வேண்டும். மாடுபிடி வீரா்கள் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். மாடுபிடி வீரா்கள் ஊக்க மருந்தோ, போதைபொருள்களை உட்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்கிறாா்களா என்பதையும் அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
மொத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என தொடா்புடைய துறை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்திட வேண்டும் எந்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில், குளித்தலை சாா்-ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு) மருத்துவா் சாந்தி, விழா குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.