டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது
தொண்டி அருகே நம்புதாளையில் ராட்டினத் தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் பரமக்குடியைச் சோ்ந்த ராட்டினம் சுற்றும் தொழிலாளி முத்துக்குமாா் கடந்த ஆண்டு நவம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் கடம்பாகுடியைச் சோ்ந்த சொக்கு (19), திருவாடானை தெற்குத் தெருவைச் சோ்ந்த அஜீத் குமாா் (19) உள்பட சிலா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சொக்கு மீது பல வழக்குகள் உள்ள நிலையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், அஜீத் குமாா் (19) மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, இவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.