யானை தாக்கியதில் ஒருவர் பலி!
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் விளைநிலத்திற்குள் புகுந்த யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தத்தூர் கிராமத்தில் இன்று (ஜன.4) விளைநிலத்தினுள் புகுந்த காட்டு யானை ஒன்று மதுசூதன் பாண்டே (வயது 45) என்பவரை தாக்கியுள்ளது.
இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பட்டியலினத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி வரை! சி.டி. ரவிகுமாா் பின்னணி!
இதனைத் தொடர்ந்து, இதை இயற்கை சாரா மரணமாக பதிவு செய்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக, சிமிலிபால் வனவிலங்கு பூங்காவிலிருந்து 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக பரிப்படா வனப்பகுதிக்குள் புகுந்ததாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.