நான் கலைஞரை சந்தித்த தருணம்! - முன்னாள் பாஜக நிர்வாகியின் பகிர்வு | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.
அது 1999 ம் ஆண்டு ஜீன் மாதம் முரசொலி மாறனிடம் இருந்து எனக்கு அழைப்பு...
நான் பாஜகவின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், 98 ம் ஆண்டு நடந்த பார்லிமெண்ட் தேர்தலுக்கு சி.பி.ராதகிருஷ்ணன் அவர்களுக்கு வாஜ்பாயின் ஆளூயர துணி பேனர்களை செய்திருந்தேன் சிபி.ராதகிருஷ்ணன் (இன்றைய மகாராஷ்டிரா கவர்னர்) என்னுடைய பால்ய நண்பர்...
வாஜ்பாய் அவர்களின் ஆளுயர துணி பேனர்களை முரசொலி மாறன் பார்திருப்பார் போல...இதை யார் செய்தது என்று விசாரித்ததில் என் பெயரை சொல்ல என்னை சென்னையில் வந்து சந்திக்கும்படி சொன்னார்கள்.
அடுத்த நாள் நான் சென்னையில் முரசொலி மாறன் அவர்களை அவரின் வீட்டில் சந்தித்தேன். அவர் கலைஞருடன் கோட்டைக்கு செல்ல இருந்தார். என்னையும் அவரின் காரில் வரசொல்லிவிட்டு, அவர் கலைஞருடன் காரில் வந்தார். முதல்வர் கலைஞரின் கான்மாயில் கோட்டைக்கு செல்ல, கோட்டையில் என்னை காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் அதே கான்மாயில் அறிவாலயம் சென்றேன்.
எனக்கு பிரமிப்பாக இருந்தது. முரசொலி மாறன் அவர்கள் என்னை அறிவாலயத்தில் மாடியிலிருந்து சன் டிவி யின் அலுவலகத்தில் சந்தித்து வரும் செப்டம்பர் மாதம் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு கலைஞரின் ஆளுயர படம் போட்ட பேனர் வேண்டும் என்றும் உடனே சேம்பிள் பேனர் தயார் செய்ய சொன்னார்.
நானும் மீண்டும் திருப்பூர் வந்து சேம்பிள் பேனரை தயார் செய்து கொண்டு அறிவாலயம் சென்றேன்.
கலைஞரின் ஆளுயர பேனரில் கலைஞர் உதய சூரியன் சின்னத்தை கைகாட்டி கொண்டு இருப்பது போல் பேனர் செய்தேன்.. அதன் மேல் கலைஞர் அவர்கள் சொன்னது போல "மதசார்பற்ற தன்மை உறுதிபட மனித நேயம் வலுப்பெற ஆதரிப்பீர் உதய சூரியன்"என்னும் வாக்கியத்தையும் சேர்த்தேன்..
இதன் இடையே முதல்வர் கலைஞர் அவர்களை இரண்டு மூன்று முறை சந்தித்து பிழைகளை திருத்தி நான்காம் முறை அவரை சந்திக்கிறேன். என்னுடன் ஏதோ ரொம்ப நாள்கள் பழகியவர் போலவே பேசினார் "பேனர் தம்பி" என்னும் அடை மொழியிலேயே என்னை அழைத்தார்.,பிரம்பிப்புடன் நான்காம் முறை அவரை சந்தித்தேன்..
அறிவாலயத்தில் முதல்வர் கலைஞர்., முரசொலிமாறன்., ஆற்காடு வீராசாமி ஆகியோர் இருந்தனர்.
பேனர் எண்ணிக்கையும்.. விலையும் பேசி முடிக்க அரை மணி நேரமானது., இடையில் உப்பு கடலை வர எனக்கும் அவரின் கையாலேயே கொடுத்தார்.
அய்யா பத்து ரூபாய் அட்வான்ஸ் கொடுங்கள் என்றேன்.. அவர் சிரித்தபடி ஆற்காடு பேனர் தம்பிக்கு பத்து ரூபாயை கொடு என்றார்.
தமாஷாக கோயம்புத்தூர் காரங்களுக்கு குசும்பு பாரு பத்து லட்சத்தை பத்து ரூபாய் என்கிறார். சரி ஏழு ரூபாய் வாங்கிக்க என்றார் முதல்வர் கலைஞர்.(ஏழு லட்சம்)
அது முப்பது லட்சம் ரூபாய் ஆர்டர் சரியான முறையில் செய்து டெலிவரி கொடுத்து முழு பணத்தையும் பெற்றுக் கொண்டேன் குறைந்த லாபமென்றாலும் கலைஞரிடம் நேராக பேசும் சந்தர்ப்பம் அமைந்ததால் அது பொருட்டாக பட வில்லை..
அதன் பின்னரும் கலைஞரை பல முறை சந்திக்க நேர்ந்தது..
2001 ம் ஆண்டு முதல் தேதி கன்னியாகுமரியில் அதே பேனரை என் சொந்த முயற்சியில் 200 பேனர்களை மட்டும் செய்து கொடுத்தேன்..
தேர்தல் வாசகத்தை அழித்து விட்டு,
``இதனை இதனால் இவன் முடிக்கும்
என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்”
என்னும் திருக்குறளை பதித்து செய்ததில் எனக்கு மனநிறைவே..
கன்னியாகுமரியில் அவர் அந்த பேனரை பார்த்துவிட்டு பின்னர்
"இதனை இதனால் இவன் முடிக்கும்.,
என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்" - என்று என்னை சுட்டி காண்பித்து சொன்னது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.
ஒரு எளிமையான முதல்வரை சந்தித்தது எனக்கும் நிறைவே..
நன்றி.
அன்புடன்.,
- சுதா மோகன்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...