செய்திகள் :

பட்டாசு ஆலை விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்

post image

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று(சனிக்கிழமை) காலை திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இரண்டு பேர் காயமுற்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரத்தில் சிவகாசி ஆலமரத்தப்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50- க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று காலை பணியைத் துவங்கினர். அப்போது உராய்வு காரணமாக ரசாயன அறையில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது.

வெடிச்சத்தம் கேட்டவுடன் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர்.

இந்த வெடிவிபத்தில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், குருந்தமடத்தைச் சேர்ந்த காமராஜ், வேல்முருகன், வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன், செட்டிகுறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே இடுபாடுகளில் சிக்கி பலியாகினர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

வச்சக்காரப்பட்டி போலீசார் இடிபாடுகளில் சிக்கி இருந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உரிமையாளர் பாலாஜி, சசிபாலன், மேனேஜர் தாஸ் பிரகாஷ், பேர்மென் சதீஸ்குமார் ஆகிய 4 பேரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

சட்டப்பேரவையின் மரபு காக்கப்பட வேண்டும்: விஜய்

தமிழக சட்டப்பேரவையின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆள... மேலும் பார்க்க

ஆப்கானின் மீதான பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.ஆயுதம் ஏந்திய பயங்கர வாதக் குழுக்களுக்கு தலிபான் அரசு அடைக்கலம் தருவதாகவும் அதனால் தீவிரவாதிகள் பதுங்... மேலும் பார்க்க

இனி ஒரே அட்டையில் மெட்ரோ, மாநகரப் பேருந்தில் பயணிக்கலாம்!

சிங்கார சென்னை பயண அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI) ... மேலும் பார்க்க

கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்! 17 வயது மாணவன் கைது!

மகா கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிகாரைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறு... மேலும் பார்க்க

ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் சென்றுள்ளது சிறுபிள்ளைத்தனமானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் ஆர்.என். ... மேலும் பார்க்க

இந்தியர் கொலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் கைது!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த குல்தீப் குமார் (வயது 35) என்பவர் கடந்த ... மேலும் பார்க்க