செய்திகள் :

46 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

post image

இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 46 ஆண்டுகால சாதனையை ஆஸ்திரேலியாவில் முறியடித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்து பந்துவீசுவதில் சிரமம் என ஸ்கேன் எடுக்க மருத்துவமனை சென்றார்.

இந்த 2 விக்கெட்டுகளுடன் இந்தத் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா தொடரில் ஒரு இந்தியரின் அதிகபட்ச விக்கெட்டுகள் 31ஆக இருந்தது. அதை பிஷன் பேடி 1977-78 தொடரில் எடுத்திருந்தார்.

தற்போது, 46 ஆண்டுகளுக்குப் பிறகு பும்ரா அதை முறியடித்துள்ளார்.

ஸ்கேன் எடுக்க சென்ற பும்ரா மீண்டும் ஓய்வறைக்கு திரும்பினார்.

இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 145 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு வீரர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகள் பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த மௌரிஸ் டாடே 38 விக்கெட்டுகள் (1924) உடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் பும்ரா 10ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுகள் எடுத்தால் ஆஸி.யில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற உலக சாதனையை நிகழ வாய்ப்பிருக்கிறது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற மே.இ.தீ. அணி!

மே.இ.தீ. அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இன்று (ஜன.6) மே.இ.தீ. அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தது. இதற்கு முன்னதாக 2006ஆம் ஆண்டு மே.இ.தீ. அணி பாகிஸ்தானில் ட... மேலும் பார்க்க

பிஜிடி கோப்பையை வழங்க கவாஸ்கர் அழைக்கப்படாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வழங்க அழைக்கப்படாதது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் பும்ரா?

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவ... மேலும் பார்க்க

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சி... மேலும் பார்க்க