செய்திகள் :

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

post image

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் படிக்க:“சூப்பர் ஸ்டார் கலாசாரம்...” விராட் கோலியை சரமாரியாக விளாசும் முன்னாள் இந்திய வீரர்!

ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்

பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், மூத்த வீரர்கள் எந்த ஒரு காரணமும் கூறாமல் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜனவரி 23 ஆம் தேதி முதல் அடுத்த ரஞ்சி கோப்பை சுற்றுகள் தொடங்குகின்றன. பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற எத்தனை வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். விளையாட முடியவில்லை என எந்த ஒரு காரணமும் இருக்கக் கூடாது. அந்த போட்டிகளில் விளையாடவில்லையென்றால், விளையாடாதவர்களுக்கு எதிராக கௌதம் கம்பீர் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் பதில்!

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் மிகவும் தடுமாறினர். ஒரே தவறை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தொடரில் மட்டுமல்லாது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். அதன் காரணத்தினாலேயே நாம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அடுத்த சுழற்சி வருகிற ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. அதற்கு நாம் இப்போதிருந்தே தயாராக இருக்க வேண்டும். நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருந்தால், அதனை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும், தங்களது ஆட்டத்தை மேம்படுத்திக் கொண்டு தங்களுக்கு பெருமை தேடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் வீரர்களுக்கு இருக்கிறது. இது போன்ற வீரர்கள்தான் அணிக்கு வேண்டும். விக்கெட்டினை அவர்களது உயிர் போன்று பாதுகாக்கும் வீரர்கள் தேவை.

இதையும் படிக்க: பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

அதன் காரணமாகவே நான் வருகிற ஜனவரி 23 ஆம் தேதி ரஞ்சி கோப்பை தொடரில் யார் விளையாடப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். ஏனெனில், அந்த நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாதவர்கள், ரஞ்சி கோப்பையில் விளையாடுவார்களா? மாட்டார்களா? என்பதைப் பார்க்கலாம் என்றார்.

பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள... மேலும் பார்க்க

உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர் - க... மேலும் பார்க்க

10 ஆயிரம் ரன்கள் சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதென்ன?

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் தவறவிட்டார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளு... மேலும் பார்க்க

பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி: உஸ்மான் கவாஜா

சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்

புதிதாக அணியில் இணைந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்தி வெற்றிபெறலாம் என நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை என முன்னாள் ஆஸி. வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். பார்டர் - ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன... மேலும் பார்க்க