விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கிப் பயின்று வரும் மருத்துவ மாணவி(25) விடுதி வளாகத்திலேயே சக மருத்துவ மாணவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
தேர்வு எழுதுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜன. 5) அன்று மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். அப்போது அந்த மாணவர், மாணவியை சந்திக்க வரும்படி கூறியுள்ளார். அதன்படி ஆண்கள் விடுதி வளாகத்தில் இருவரும் சந்தித்துள்ளனர்.
அப்போது மாணவர் வலுக்கட்டாயமாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையில் மாணவி புகார் அளிக்க, மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.