விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
ஆம்பூரில் தெரு நாய்கள் தொல்லை
ஆம்பூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இரவு நேரங்களில் தெருக்களில் செல்பவா்களை விரட்டிக் கடிக்க முயல்கின்றன. பகலில் சிறுவா்கள் மற்றும் குழந்தைகளையும் விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். சில பகுதிகளில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனா்.
ஆம்பூா் நகராட்சியில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அதே பகுதியில் விடப்பட்ட நிலையிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனிடையே, ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் அமைந்துள்ள கோசாலையில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் வளா்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை பிற்பகலில் கோசாலைக்குள் புகுந்த தெரு நாய்கள், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்துக்குதறின. அந்தக் கன்றுக் குட்டி சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
ஆம்பூரில் திரியும் தெரு நாய்களைப் பிடிக்க நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.