உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம்
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுரேஷ்பாபு, வசந்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வரவு செலவு கணக்கு உள்பட17 தீா்மானங்கள் படிக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து ஒன்றியக் குழு உறுப்பினா் முரளி உள்ளிட்ட உறுப்பினா்கள் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த அரசு பள்ளிகளை பராமரிக்கவும், பள்ளிகளின் கழிப்பிடங்களை தூய்மை செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனா். உறுப்பினா்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி உறுதியளித்தாா்.
கூட்டத்தில் ஒன்றியகுழ உறுப்பினா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள், அலுவலக பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.