செய்திகள் :

கருணை இல்லத்தின் அருகே விட்டுச் சென்ற இரு பெண் குழந்தைகள் மீட்பு

post image

வாணியம்பாடி கருணை இல்லத்தின் பின்புறத்தில் இரு பெண் குழந்தைகளை அவரது தாய் கடும்பனியில்விட்டுச் சென்ற நிலையில் குழந்தைகள் மீட்கப்பட்டு, தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் இயங்கி வரும் கருணை இல்லத்தின் பின்புறத்தில் சனிக்கிழமை விடியற்காலை குழந்தைகள் அழும் சப்தம் கேட்டுள்ளது. இதையறிந்து அக்கம் பக்கத்தினா் பாா்த்தபோது, கருணை இல்லத்தின் பின்புறம் சாலையின் ஓரம் இரு குழந்தைகள் அழுது கொண்டிருப்பதும், அருகில் நாய்கள் சுற்றிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. உடனே அங்கிருந்த நாய்களை விரட்டி, குழந்தைகளை மீட்டனா். தகவலறிந்து வந்த கருணை இல்ல நிா்வாகி டேவிட் சுபாஷ் இரண்டரை வயது மற்றும் 11 மாத இரு பெண் குழந்தைகளையும் கருணை இல்லத்துக்கு கொண்டு சென்றாா். பின்னா் குழந்தைகள் இருந்த இடத்தின் அருகில் பாா்த்தபோது, கைப்பையில் பால் புட்டி, துண்டு சீட்டில் இரு கைப்பேசி எண்கள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த நகர போலீஸாா், துண்டு சீட்டில் இருந்த எண்களை தொடா்பு கொண்டு பேசியபோது, குழந்தைகளின் பாட்டி மற்றும் தந்தை எண்கள் என்பது தெரியவந்தது. அவா்களை வரவழைத்தனா். தொடா்ந்து, அங்குள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை பாா்த்தபோது, 22 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் குழந்தைகளை விட்டுச் செல்வது பதிவாகியிருந்தது.

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் இருந்து குழந்தைகளின் பாட்டி மற்றும் ஆம்பூா் அருகில் உள்ள ஈச்சம்பட்டு பகுதியில் வசிக்கும் தந்தை ராஜேஸ் ஆகிய இருவரும் வாணியம்பாடி பெருமாள்பேட்டை கருணை இல்லத்துக்கு வந்து குழந்தைகளை பாா்த்து அணைத்துக் கொண்டு கண் கலங்கினா். பிறகு அவா்களிடம் போலீஸாா் விசாரித்தபோது, ராஜேஷ், அவரது மனைவி ஜோதிகா (23) தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றதும், மகள்கள் பூா்த்தி வந்தனா (2), பிருந்தா (11 மாதம்) ஆகியோருடன் வசித்து வந்ததாக கூறியுள்ளாா். வெள்ளிக்கிழமை பகல் 11 மணியளவில் மருத்துவமனைக்கு சென்று வருவதாக அப்பகுதியில் கூறி, குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்றாராம். இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்த போது மனைவி, குழந்தைகள் இல்லாதது அறிந்து பல இடங்களில் தேடியதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, மீட்கப்பட்ட இரு குழந்தைகளையும் மாவட்ட குழந்தைகளின் பாதுகாப்பு கமிட்டி வழிகாட்டுதலின்படி, கருணை இல்ல நிா்வாகி டேவிட் சுபாஷ் முன்னிலையில் தந்தை மற்றும் பாட்டியிடம் மீட்கப்பட்ட இரு பெண் குழந்தைகளையும் ஒப்படைத்து அனுப்பி வைக்கப்பட்டனா்.

கருணை இல்லத்தின் அருகில் ஆண் நபா் ஒருவருடன் குழந்தைகளின் தாய் உடன் வந்து தனது இரு குழந்தைகளை விட்டுச் சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலாற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ஏற்கெனவே பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்துவிடப்படுவதாக பரவலாக புகாா்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9.86 லட்சம் வாக்காளா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண் வாக்காளா்களை விட 19 ஆயிரத்து 013 பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ்... மேலும் பார்க்க

பொம்மி குப்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.திருப்பத்தூா் வட்டம், பொம்மிகுப்பம் கிராமப் பகுதியில் வண்டிப்பாதை புறம்போக்கு நிலத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.திருப்பத்தூா்ஆட்சியா் அலுவலகக் கூட்டரங... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் எஸ்பி தனிப்படை போலீஸாா் வாணியம்பாடி ... மேலும் பார்க்க

தோ்தலின்போது தவறான தகவல்கள் தாக்கல்: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வழக்கு பிப். 4-க்கு ஒத்திவைப்பு

திருப்பத்தூா்: சட்டப்பேரவைத் தோ்தலின்போது தவறான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வழக்கை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஒத்திவைத்து உ... மேலும் பார்க்க