ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாம...
சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் விசாரணை
புது தில்லி: இந்தியாவில் முதல்முறையாக மத்திய புலனாய்வுப் பிரிவால்(சிபிஐ) ‘பாரத்போல்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஐ-இன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள ‘பாரத்போல்’ தளத்தில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள விசாரணை முகமைகளால், தேடப்படும் குற்றவாளிகள் உள்பட அனைத்து குற்றவாளிகளின் விபரங்களை சிபிஐ வடிவமைத்துள்ள ‘பாரத்போல்’ தளத்தில் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் இன்று(ஜன. 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பாரத்போல்’ தளத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதன்மூலம், குற்ற விசாரணையில் தேவைப்படும் ஒத்துழைப்பையும் உதவியையும் எளிதில் பெற்று விசாரணையை விரைந்து முடிக்க பயனுள்ளதாக இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச காவல்துறையான ‘இண்டர்போல்’ மூலம் தேவையான உதவியையும் ஒத்துழைப்பையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடுவிட்டு நாடு எல்லைகளைக் கடந்து அரங்கேறக்கூடிய இணையவழி மோசடி குற்றச் செயல்கள், நிதி மோசடிகள், கடத்தல் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல், பெண்கள், மனித உறுப்புகள், விலங்குகள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் சர்வதேச அளவில் ஒத்துழைப்பை பெற்று குற்றவாளிகளை எளிதில் கண்டறிய ‘பாரத்போல்’ தளம் உதவிகரமாக இருக்கும்.
குற்ற வழக்குகளில் விசாரணை குறித்த தகவல்களையும் நிலவரங்களையும் எழுத்துப்பூர்வமாகக் கடிதம் மற்றும் மின்னஞ்சல், தந்தி வடிவில் பெற்று அதன்பின் விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்துச் செல்லும் நடைமுறைக்கு மாற்றாக மேற்கண்ட விவரங்களை டிஜிட்டல் வடிவில் பெற்று விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.