பொம்மி குப்பத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த பொம்மிகுப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.
திருப்பத்தூா் வட்டம், பொம்மிகுப்பம் கிராமப் பகுதியில் வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வட்டாட்சியா் நவநீதத்திடம் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதையடுத்து வட்டாட்சியா் அறிவுறுத்தலின்பேரில் திங்கள்கிழமை மண்டல துணை வட்டாட்சியா் கு.தணிகாசலம் மற்றும் வருவாய் ஆய்வாளா் ஜெ.மணிகண்டன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலையில் குறுவட்ட அளவியா் மூலம் நில அளவீடு செய்யப்பட்டு 20 சென்ட் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.