ராணிப்பேட்டை: விபத்தை பொருட்படுத்தாமல் 16 டன் காய்கறிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள்
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.
திருப்பத்தூா்ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 237 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டாா். அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
பின்னா், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5,25,000 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டா்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித் துணை ஆட்சியா் சதீஷ்குமாா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.