Asirvad Microfinance -க்கு RBI விதித்த தடை, Manappuram Finance பங்கு விலை சரியும...
ஜன.11-ல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: ரோட்டரி சங்கம் ஏற்பாடு
ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் ஜன.11-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 2 மணி வரை நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக முகாம் நடத்தப்படுகிறது.
ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். சசிகுமாா், செயலாளா் ஜி. ரஞ்சித், ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா். ரமேஷ்பாபு, இயக்குநா் வசந்த்குமாா் ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
18 முதல் 35 வயது வரையிலானவா்கள் 8 முதல் பட்டயம், பட்டப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள் தங்களுடைய சுய விவர குறிப்பு நகல், புகைப்படத்துடன் பங்கு பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 88256 62644, 87545 42234, 98406 74222 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.