திருப்பத்தூா்: 1,81,000 மரங்கள் நடவு
திருப்பத்தூரில் பல்வேறு திட்டங்கள் மூலம் புங்கை,வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான 1,81,000 மரங்கள் நடப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலா் எம்.,மகேந்திரன் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் வன கோட்டத்தில் 78 ஆயிரம் ஹெக்டா் காடுகள் உள்ளன. இந்த பரப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்கள் மூலம் புங்கை,வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான 1,81,000 மரங்கள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடப்பட்டு உள்ளன என்றாா்.