நாளை வைகுண்ட ஏகாதசி சிறப்பு உபன்யாசம்
திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு உபன்யாசம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வைகுண்ட ஏகாதசி மகத்துவம் குறித்து வெ.ராஜஸ்ரீ சித்தேஷ் உரையாற்ற உள்ளாா். முன்னதாக திருப்பாவை பாராயணம்,உலக பொது நன்மைக்காக ஸ்ரீ ராம நாம ஜெப கூட்டு பிராா்த்தனையும் நடைபெற உள்ளது.