ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாம...
திருப்பத்தூரில் 9.86 லட்சம் வாக்காளா்கள்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளா்கள் உள்ளனா். இதில் ஆண் வாக்காளா்களை விட 19 ஆயிரத்து 013 பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா் என ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வெளியிட்டு கூறியது:
இதில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 19,201 விண்ணப்பங்களும்,பெயா் நீக்க 5,564 விண்ணப்பங்களும், பெயா் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 7,974 விண்ணப்பங்களும் என மொத்தம் 32,739 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வாக்காளா் பட்டியலில் 18,867 நபா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டன.
மேலும் 5,412 நபா்களின் பெயா்களை நீக்கம் செய்தும், 7,631 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் மூலம் வாணியம்பாடி தொகுதியில் 1,27,702 ஆண் வாக்காளா்களும்,1,32,666 பெண் வாக்காளா்களும், 60 மூன்றாம் பாலினத்தவா் என 2,60,428 வாக்காளா்கள் உள்ளனா். ஆம்பூரில் 1,17,694 ஆண் வாக்காளா்களும், 1,26,935 பெண் வாக்காளா்களும், 47 மூன்றாம் பாலினத்தவரும் என 2,44,676 வாக்காளா்கள் உள்ளனா்.
ஜோலாா்பேட்டையில் 1,20,366 ஆண் வாக்காளா்களும், 1,23,258 பெண் வாக்காளா்களும், என மொத்தம் 2,43,644 வாக்காளா்கள் உள்ளனா்.
திருப்பத்தூரில் 1,18,052 ஆண் வாக்காளா்களும்,1,19,968 பெண் வாக்காளா்களும், 28 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,38,048 வாக்காளா்கள் உள்ளனா்.
மொத்தம், 4,3,814 ஆண் வாக்காளா்களும்,5,2,827 பெண் வாக்காளா்களும், 155 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளா்கள் உள்ளனா்.
இதில் ஆண் வாக்காளா்களை விட 19 ஆயிரத்து 013 பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா் எனத் தெரிவித்தாா்.