Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' - கமெண்டேட்டர் நானி எக்ஸ...
போதைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் எஸ்பி தனிப்படை போலீஸாா் வாணியம்பாடி அடுத்த பத்தாப்பேட்டை பகுதியில் உள்ள பங்க் கடையில் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப் உட்பட போதைப் பொருள்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டறிப்பட்டது.
மேலும், அங்கிருந்து 12 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து கடை உரிமையாளா் சதீஷ் மற்றும் பறிமுதல் செய்த போதைப் பொருள்களையும் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் போலீஸாா் சீல் வைத்தனா்.