கூலி - தாய்லாந்து சென்ற ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் ஜெய்ப்பூரில் அமீர் கானுடன் இணைந்து ரஜினி நடித்தார்.
பான் இந்திய வணிகத்திற்காக படத்தில் பல மாநில நடிகர்களும் இணைந்து நடித்து வருவதால் கூலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
சமீபத்தில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ”கூலியின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜன. 13 - ஜன. 28 வரை நடைபெறுகிறது.” என்றார்.