தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
மதுபாட்டில்கள் விற்பனை: 3 போ் கைது
ஆம்பூரில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் துத்திப்பட்டு, கடாம்பூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
அதன்பேரில் மேல்கன்றாம்பல்லியைச் சோ்ந்த பட்டாபி (40), கடாம்பூரைச் சோ்ந்த குப்பன் (50) ஆகியோரை உமா்ஆபாத் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
அதே போல ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த தினேஷ் (35) என்பவரை ஆம்பூா் நகர போலீஸாா் கைது செய்தனா்.