தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 2 போ் மீது வழக்கு
ஜோலாா்பேட்டையில் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் இளைஞா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (28). இவருக்கும் திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் பெற்றோா் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் வெங்கடேசன் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாக சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சமூக நலத் துறை விரிவாக்க அலுவலா் ஜெயக்குமாரி தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், வெங்கடேசன் சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது.
இதையடுத்து விரிவாக்க அலுவலா் ஜெயக்குமாரி அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வெங்கடேசன் மற்றும் அவரது தாய் பொன்மாலா ஆகிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.