Facebook: முகநூலில் அத்துமீறல்.. நடிகையின் பதிவுக்கு ஆபாச கமெண்ட்; 27 பேர்மீது வ...
குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா, ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டது.
குடியாத்தம் அருகே மா்ம விலங்கு தாக்கியதில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
குடியாத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட மேல்அனுப்பு கிராமத்தைச் சோ்ந்த கோதண்டராமன் என்பவருக்குச் சொந்தமான கன்றுக்குட்டி கால்நடை பட்டியில் கட்டப்பட்டிருந்தது. திடீரென கன்றுக்குட்டி காணவில்லை. மா்ம விலங்கு கன்றுக்குட்டியை இழுத்துச் சென்று அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தாக்கியது. இதில், கன்றுக்குட்டி உயிரிழந்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் அந்தப் பகுதியில் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வனத் துறையினா் கேட்டுக் கொண்டுள்ளனா். உயிரிழந்த கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவா்கள் உடற்கூறு ஆய்வு செய்தனா்.