`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழ...
TN Assembly : 2025-ன் முதல் சட்டப்பேரவை கூட்டம்... பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ஆளுநர் உரை! | Live
2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 45 நிமிடங்கள் வரை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்த்து வாசிப்பார். ஆளுநர் உரை முடிந்த பிறகு, சமீபத்தில் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவிற்கும், மற்ற பிற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
அதற்கு அடுத்த நாள்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் பேரவையில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த கால ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த சிலப் பகுதிகளை புறக்கணித்து வாசித்திருந்தார். ஒரு சமயத்தில், சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதெல்லாம் அப்போது அரசியல் அரங்கில் விவாதமானது. அதனால் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.