செய்திகள் :

விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

post image

விண்வெளிக்கு பிஎஸ்எல்வி சி-60 விண்கலம் மூலம் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் நாள் நாள்களில் முளைவிட்டிருக்கும் நிலையில், வெடி வளர்ப்பு சோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆய்வு முதல் வெற்றியை எட்டியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியை செய்து பார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, பிஎஸ்எல்வி சி-60 விண்கலம் மூலம் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலில் ஏழு நாள்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

காராமணி விதை ஏன்?

விண்வெளியில் செடி வளர்ப்பு திட்டம் குறித்த சோதனை உதயமானதும், பல்வேறு விதைகளும் அதன் வளரும் தன்மை உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. பூமியிலேயே, விண்வெளியின் சூழலில் வளருவதற்கு ஏற்ப மற்றும் குறுகிய கால பயிராக இருக்கும் விதைகள் பரிசோதிக்கப்பட்டன். இதன்படி பல்வேறு விதைகளை ஆராய்ந்து இறுதியாகத்தான் காராமணி விதை தேர்வு செய்யப்பட்டது.

ஒரு மூடிய பெட்டகத்துக்குள் எட்டு காராமணி விதைகள் வைத்த தும்பா என்று பெயரிடப்பட்ட சிறுகோள் இதற்கென தயாரிக்கப்பட்டு, மைக்ரோ ஈர்ப்பு விசை சூழலில் 5 முதல் 7 நாள்கள் வரை இது தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதில், காராமணி முளை விடுதல் மற்றும் முதல் இரண்டு இலைகள் வளர்வது மட்டுமே முதற்கட்ட ஆய்வு நிலைகளாக உருவாக்கப்பட்டுள்ளன.

விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு அதில் முதல் வெற்றியைப் பெற்றிருப்பதாகவே இது பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சி (CROPS)யாக, பிஎஸ்எல்வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளும் ஒன்று.

அதாவது, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது. விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாத்திரை போல நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

பாரதிய அந்தாரிக்ஷ் மையம் எனப்படும் இந்திய ஆய்வு மையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி, விண்ணுக்கு ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்து அனுப்பியிருக்கிறது. பிறகு, இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

விண்வெளியில், இந்தியா ஆய்வு மையத்தை நிறுவியதும், இஸ்ரோ மிக ஆழமான பல ஆய்வுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

ஹெச்எம்பிவி வைரஸ்: மக்கள் அச்சப்பட வேண்டாம் - கர்நாடக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

சீனாவில் பரவிவரும் ஹெச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது.இதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையோடு இருங்கள் என மாநில சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத தில்லி முதல்வர்..!

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த மாநில முதல்வர் அதிஷி விம்மி விம்மி அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்... மேலும் பார்க்க

'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.தில்லியில் புகழ்பெற்ற இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படு... மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?

சீனா, மலேசியாவைத் தொடர்ந்து எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!

பெங்களூரு மற்றும் குஜராத்தில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வைரஸ் எப்போதோ இந்தியாவில் பரவிவிட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, பாதுகாப்புப் படையினரின் வாகன... மேலும் பார்க்க