மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
விராட் கோலி சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்: ஏபிடி வில்லியர்ஸ் அறிவுரை!
விராட் கோலியின் நண்பரும் முன்னாள் ஆர்சிபி வீரருமான ஏபிடி வில்லியஸ் சண்டையில் ஈடுபடுவதை குறைக்குமாறு கோலிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் 1-3 என இந்தியா தோல்வியடைந்தது. இதில் 9 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 190 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
விராட் கோலி அவுட் சைடு ஆஃப் பந்தில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழந்து மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் இளம் ஆஸி. வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் மோதலில் ஈடுபட்டு 20 சதவிகிதம் அபராதம் பெற்றார்.
இந்த நிலையில் ஏபிடி விராட் கோலி குறித்து கூறியதாவது:
சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும்
நாம் நமது மனதை ஒவ்வொருமுறையும் மாற்றியமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விராட் கோலிக்கு சண்டையிடுவது பிடிக்கும். நமது வாழ்க்கையில் நாம் ஃபார்மில் இல்லாதபோது இந்தமாதிரி விஷயங்களை முற்றிலுமாக நீக்குவது நல்லது. ஒரு பேட்டராக ஒவ்வொரு பந்தினையும் புதியதாக நினைத்து விளையாட வேண்டும். யார் பந்துவீசுகிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டும்.
அவரது சண்டையிடும் குணத்தினால் மேலே சொன்னதை விராட் கோலி சில நேரங்களில் மறந்துவிடுகிறார் என நினைக்கிறேன். அணியின் வீரர்களுக்காக சண்டையிட தான் ஒருவர் இருப்பதாக ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் காட்டுவதாக செயல்படுகிறார்.
விராட் கோலியின் திறமை, அனுபவம், அவரது சிறப்பு எதுவுமே பிரச்னை இல்லை. சில நேரங்களில் ஒவ்வொரு பந்துகளுக்குப் பிறகும் நாம் மனதை மாற்றியமைக்க வேண்டும்.
பலமே பலவீனம்
சில நேரங்களில் விராட் கோலி அதிகமாக ஆடுகளங்களில் சண்டைகளில் ஈடுபடுவதாக நினைக்கிறேன். அது விராட் கோலியின் பலமாக இருந்தாலும் அதுவே பலவீனமாகவும் மாறியிருக்கிறது. இந்த பிஜிடி தொடரில் ஒரு தனிப்பட்ட நபருடன் அதிகமுறை சண்டைக்குச் சென்றார். அவரது நடவடிக்கையினால் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தார்கள்.
உலகத்தில் எல்லா பேட்டர்களுக்கும் ஏதோ ஒரு பலவீனம் அல்லது சில ஆட்டமிழப்புகள் தொடர்ந்துவரும். நிச்சயமாக விராட் கோலி இந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியேறி ஃபார்முக்கி திரும்புவார்.
இதற்காக வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் பயிற்சிக எடுக்க வேண்டும். ரன்கள் குவிக்க ஆசை, மனத்திட்பமும் வேண்டும். என்னைப் பொறுத்தவரை உங்களது மனதை ஒவ்வொரு முறையும் மாற்றியமைக்க வேண்டும் என்றார்.