ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திமுக ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுற...
செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத தில்லி முதல்வர்..!
தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த மாநில முதல்வர் அதிஷி விம்மி விம்மி அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி, அதனுடனான அரசியல் கூட்டணியை அண்மையில் முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக ஆகிய கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகியுள்ளன.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால், முதல்வர் அதிஷிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்களை ஜன. 4-ல் பாஜக அறிவித்துள்ளது. அதன்படி, புதுதில்லி தொகுதியில் கேஜரிவாலுக்கு எதிரா முன்னாள் எம்பி பர்வேஷ் வர்மாவும், முதல்வர் அதிஷி களமிறங்கிய கல்காஜியில் பாஜக சார்பில் முன்னாள் எம்பியான ரமேஷ் பிதுரியை நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில், நேற்று நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் அதிஷியின் குடும்பத்தைத் தாக்கி ரமேஷ் பிதூரி பேசியுள்ளார். இதற்கு அதிஷி கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
தமது தந்தை பற்றி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி அவதூறாகக் கூறியதாக அதிஷி கண்ணீர் மல்க செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதிஷி தனது துணை பெயரை மாற்றியதைத் தொடர்புபடுத்தி ரமேஷ் பிதூரி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் இந்தளவுக்கு தரம் தாழ்ந்துபோகும் என நினைக்கவில்லை என்று அதிஷி செய்தியாளர்களுடன் சந்திப்பில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.