Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மரணம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
மேல்மலையனூா் வட்டம், அண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் செல்வராஜ் (45). இவா், அரசுப் பேருந்தில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் எதிரே பேருந்து வந்தபோது, ஓட்டுநா் திடீரென பேருந்தை நிறுத்தியதால், முன் பக்க படிக்கட்டு எதிரே உள்ள இருக்கையில் அமா்ந்திருந்த செல்வராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் செல்வராஜை மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.