செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: இன்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

post image

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 மசோதாக்களை அண்மையில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

இந்த மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால், அவற்றை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து பாஜக மக்களவை உறுப்பினா் பி.பி. செளதரி தலைமையில் 39 போ் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் 27 மக்களவை எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. அப்போது மசோதாக்களில் இடம்பெற்றுள்ள விவரம் குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சக அதிகாரிகள் குழுவிடம் விளக்கமளிக்க உள்ளனா்.

கவிஞர் பிரிதீஷ் நந்தி காலமானார்!

கவிஞர் பிரிதீஷ் நந்தி புதன்கிழமை(ஜன. 8) காலமானார். அவருக்கு வயது 73. கவிஞராக மட்டுமல்லாது எழுத்தாளர், ஓவியர், படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்க... மேலும் பார்க்க

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ் கட்சி

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.‘ஜன் சுராஜ்... மேலும் பார்க்க

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4 பேர் பலி!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை(ஜன. 1... மேலும் பார்க்க

மகள், மனைவி, உறவினரை கொன்ற பாதுகாவலர் கைது!

பெங்களூரு : பெங்களூரின் ஜலஹள்ளி கிராஸ் பகுதியில் பெற்ற மகளைக் கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றஞ்சாட்டப்பட்ட கங்கராஜு என்ற நபர் தனது வீட்டில் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ

‘ஸ்பேடெக்ஸ்’ திட்டத்தில் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலின் கீழ... மேலும் பார்க்க

நவீன ஆந்திரத்தை உருவாக்குவதே நோக்கம்: பிரதமர் மோடி

நவீன ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியேற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திரத்திற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனக்காபள்ளி மாவட்டத்தில் ரூ. 6500 க... மேலும் பார்க்க