செய்திகள் :

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு!

post image

இந்தூரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்ததற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதும் கொடுப்பதும் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜன.2 அன்று மாவட்ட நிர்வாகம் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

மேலும், தகவல் கொடுக்க செல்போன் எண்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு இந்தூர் மாவட்டத்தின் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் அஷிஷ் சிங் கூறியதாவது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிர்வாக எண்களுக்கு அழைத்து தகவல் கொடுத்ததாகவும் அதனை விசாரித்ததில் 12 பேர் கொடுத்த தகவல் உண்மை என உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க:'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

இந்நிலையில், அந்த 12 பேரில் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.6) ரூ.1,000 பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தூரில் கொண்டுவரப்பட்ட இந்த தடையினால் பிச்சை எடுப்பவரோ அல்லது கொடுப்பவரோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவி 233 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இந்த குற்றத்தினால் அவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படக் கூடும்.

முன்னதாக, கடந்த 4 மாதங்களில் அம்மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனைகளில் 400 பிச்சைக்காரர்கள் கண்டறியப்பட்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பிச்சை எடுத்த 64 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டதின் மூலம் இந்தூர் உள்ளிட்ட 10 இந்திய நகரங்களை பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜன. 11-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஜன. 11 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப... மேலும் பார்க்க

கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!

துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் காயமின்றி உயிர் தப்பினார்.Ajith Kumar’s massive crash in p... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மத்திய அரசின் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கை... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? நாளை முக்கியக் கூட்டம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎ... மேலும் பார்க்க

யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி... மேலும் பார்க்க

ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? - தமிழிசை கேள்வி

தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு மட்டும் போராட்டத்துக்கு அனுமதியா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்க... மேலும் பார்க்க