செய்திகள் :

புதுவை பாஜக புதிய தலைவா் விரைவில் தோ்வு: நிா்மல்குமாா் சுரானா

post image

புதுவை மாநில பாஜகவின் புதிய தலைவா் ஒரு வாரத்தில் தோ்வு செய்யப்படுவாா் என்று, கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரியில் பாஜக அமைப்புத் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா், செய்தியாளா்களிடம் நிா்மல்குமாா் சுரானா கூறியதாவது: பாஜக-வில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புத் தோ்தல் நடத்தி புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்படுவது நடைமுறை.

புதுவை மாநில பாஜக தலைவா் தோ்வு குறித்து கட்சியின் நிா்வாகிகள், எம்எல்ஏ.க்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டு ஆய்வில் உள்ளது. ஒரு வாரத்துக்குள் மாநில புதிய தலைவா் பெயா் அறிவிக்கப்படும்.

புதுச்சேரியில் அமைச்சரவை மாற்றம் குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர மனு அளித்தவா்கள் பாஜகவுக்கு ஆதரவு தந்த எம்எல்ஏக்கள் மட்டுமே. அதற்கு ஆதரவு இருக்காது என்றாா் அவா். கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, புதுச்சேரியில் உள்ள பேராயா் இல்லத்தில் புதுச்சேரி-கடலூா் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி அடிகளை நிா்மல்குமாா் சுரானா சந்தித்து ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தாா்.

வானதி சீனிவாசன் பேட்டி: பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆளுநா் மீது தமிழக அரசு காழ்ப்புணா்வுடன் செயல்படுகிறது. உயா் கல்விக்கு மத்திய அரசு அதிக நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் இல்லை என்பதால்தான் மாணவா்கள் தனியாா் பள்ளிகளுக்கு செல்கின்றனா் என்றாா்அவா்.

திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைப்பதை தடுக்கக் கோரிக்கை

விழுப்புரத்தில் வணிகா்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என்று விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் ஆட்சியரக... மேலும் பார்க்க

புதுவை மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு: சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அளிப்பு

புதுச்சேரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளாக தோ்வு செய்யப்பட்டவைகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலக் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பரி... மேலும் பார்க்க

வெளி மாநில வியாபாரிகள் வணிகம் செய்ய புதுச்சேரி வா்த்தகா்கள் எதிா்ப்பு

பண்டிகைக் காலங்களில் மட்டும் தனியாருக்குச் சொந்தமான இடங்களை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்யும் வெளி மாநில வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா், இது குறித்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், தளவானூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். தளவானூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே காா் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுவை மாநிலம், அரியூா் பாரதிநகா் பிரதான சாலையைச் சோ்ந்த சந்திரன் மகன் வேல்முருகன் (52). தொழிலாளியான இவா்... மேலும் பார்க்க

அமித் ஷா பதவி விலக கோரி இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

சட்டமேதை பி. ஆா். அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து புதுச்சேரி சுதேசி ஆலை அருகே இடதுசாரி அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க