'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!
'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லியில் புகழ்பெற்ற இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் 'இந்தியா கேட்' உள்ளது. இது போர் நினைவுச் சின்னமாக 1931ல் திறக்கப்பட்டது. முதல் உலகப் போரில் உயிர்நீத்த 82,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. இந்த 'கேட்'டில் 13,300 அதிகாரிகள், வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா கேட் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க | ஆளுநர் ஏன் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்? - முதல்வர் மு.க. ஸ்டாலின்
நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா கேட் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் .
இந்தியாவின் சின்னத்துக்கு பாரத மாதாவின் பெயரைச் சூட்டுவது தேசத்தின் சிறப்பான உணர்வை பிரதிபலிக்கும், தங்கள் உயிரை நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதையாகவும் இருக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.