செய்திகள் :

குட் பேட் அக்லி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க: பாகுபலி - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!

தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித் முடித்துள்ளார். படப்பிடிப்பு துவங்கும்போதே இந்தாண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என கூறியிருந்தனர்.

ஆனால், முதலில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் பொங்கல் வெளியீட்டை குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. தற்போது, விடாமுயற்சியும் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவில்லை.

இந்த நிலையில், குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான, போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ஓபன் பாட்மின்டன்: ஒலிம்பிக் சாம்பியன்கள் பங்கேற்பு

யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன்கள் விக்டா் ஆக்செல்சன், ஆன் சே யங் உள்பட முன்னணி இந்திய வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். 3-வது சீசன் போட்டி ஜன. 14 முத... மேலும் பார்க்க

யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மதகஜராஜா!

விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் புதிய டிரைலர் யூடியூப் டிரெண்டுங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத க... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை பட டிரைலர்!

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசைய... மேலும் பார்க்க

நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு... மனிஷா கொய்ராலா பகிர்ந்த விடியோ!

நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு தான் என்ன செய்தேன் என விடியோ பகிர்ந்துள்ளார். அதில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில், “நிலநடுக்கத... மேலும் பார்க்க

மீண்டுமா? பொங்கல் வெளியீட்டில் புஷ்பா - 2!

புஷ்பா - 2 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில்... மேலும் பார்க்க